Headlines

கிழக்கு மாகாணசபை உறுப்பினர் சுபைருக்கு முதலமைச்சின் இணைப்புச்செயலாளர் நாசரின் பதில்

Posted by R | Saturday, December 31, 2016 | Posted in

‘’ஏறாவூர் ஆதார வைத்தியசாலையின் அபிவிருத்தியைத் தடுத்து ஏறாவூர் மண்ணுக்கு துரோகமிழைத்தார் முதலமைச்சர்’’ என்ற கிழக்குமாகாண சபை உறுப்பினர் சுபைர் அவர்களின்  ஊடக அறிக்கைக்கு கௌரவ கிழக்குமாகாண முதலமைச்சரின் இணைப்புச் செயலாளரும் ஏறாவூர் நகரசபையின் முன்னாள் தவிசாளருமான அப்துல் நாசர் அவர்களின் பதில் அறிக்கை...

ஏறாவூர் ஆதார வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு தேவையான உபகரணங்களை வழங்குவதற்காக அமைச்சர் ஹிஸ்புல்லா அவர்கள் வைத்திய சாலையின் வைத்திய அத்தியட்சகர் அவர்களிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு கேட்டதாகவும், பின்பு வைத்திய அத்தியட்சகர் முதலமைச்சரிடம் இச் செய்தியை சொன்னதும் அதனை பெற வேண்டாம் என்று முதலமைச்சர் கூறியதாகவும் மாகாணசபை உறுப்பினரால்  தெரிவிக்கப்பட்ட  அப்பட்டமான பொய்யை  முழுப்பூசணிக்காயை ஒரு பீங்கான் சோற்றுக்குள் மறைக்கின்ற ஊடக அறிக்கையாகவே  நான் பார்க்கின்றேன்.

கௌரவ கிழக்குமாகாண முதலமைச்சர் அவர்களைப் பொருத்தவகையில் 2015.02.06 இல் முதலமைச்சராக பதவியேற்று மிகவும் வினைத்திறனாகவும் பிரதேச வேறுபாடுகளின்றியும், தமிழ், முஸ்லிம், சிங்களம் என்கின்ற இன வேறுபாடின்றியும் தன்னுடைய முதலமைச்சர் பொறுப்பை காத்திரமான முறையில் செய்துவருகின்றார். இதற்கு ஆதாரம் மாகாணசபையில் பெரும்பான்மையான உறுப்பினர்கள் இன கட்சி வேறுபாடின்றி அவருக்கான ஆதரவினை வழங்கிவருகின்றனர்.

கடந்தகால மாகாணசபை ஆட்சி முறைமையை விட முற்றிலும் வேறுபட்டு இலங்கை அரசியல் அமைப்பின் 13 வது சீர்திருத்தத்தில் கூறப்பட்ட மாகானசபைக்குரிய அதிகாரங்களை வெற்றுக் கடதாசியில் மாத்திரம் வைத்திராமல் அதனை செயற்பாட்டில் கொண்டுவந்து யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட எமது பிரதேசத்தை அபிவிருத்தி செய்யும் நன்னோக்கில் மத்திய அரசாங்கத்திடமிருந்து பல பேச்சுவார்த்தைகள், நட்புறவு மற்றும் ஏனைய மாகாண முதலமைச்சர்களின் அனுசரணையுடன் மாகாணத்துக்கேயுரிய அதிகாரங்களைப் பெற்று செயற்பட்டுவருவதனை இம்மாகானமும் மக்களும் நன்கு அறிவார்கள். இதனை மேலும் உறுதிப்படுத்துவதற்காக கிழக்குமாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் அவர்களே இம்முதலமைச்ச்சரின் வினைத்திறனான செயற்பாட்டினை  வரவேற்றிருந்தார்.

முதலமைச்சரின் இவ்வாறான பன்முக ஆளுமை நிறைந்த மாகாணத்தின்  செயற்பாடுகளை தாங்கிக்கொள்ள முடியாத காழ்ப்புணர்வின் வெளிப்பாடே இவரின் ஊடக அறிக்கையாகும். ஏறாவூர் ஆதார வைத்தியசாலையைப் பொருத்தவகையில் மிக நீண்ட காலமாக ஏனைய ஆதாரவைத்தியசாலைகளோடு ஒப்பிடுகின்றபோது ஆகவும் குறைந்த வளத்துடன் செயற்பட்டுவருவது மாகாண சுகாதார அமைச்சராக இருந்த சுபையிருக்கு தெரியாமல் இருக்கமுடியாது. இதனை அங்கு வைத்தியசேவை பெறுகின்ற மக்களும் வைத்தியசாலை நிருவாகமும் தெளிவாக விளங்கியிருக்கிறார்கள். தான் சுகாதார அமைச்சராக இருந்து குறிப்பிட்ட வேலைகளை மாத்திரமே செய்துவிட்டு வைத்தியசாலையின் பாரிய சேவைகளைச் செய்தவரைப் போல நடிப்பது எமது மக்களுக்குத் தெரியாமலில்லை.

கௌரவ கிழக்குமாகான முதலமைச்சர் அவர்கள் எமது  பிரதேசத்தின் நீண்டகால அபிவிருத்தித் தேவைகளையும் குறைபாடுகளையும் இனங்கண்டு மாகாண, மத்திய அரசாங்கத்தின் அமைச்சர்களின் நிதி ஒதுக்கீடுகளைப் பெற்று செய்துவருகின்றார். உதற்குப் பக்கபலமாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தேசிய தலைவரும் நகரத் திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சருமான அல்ஹாஜ் ரவூப் ஹக்கீம் அவர்களின் ஒத்துழைப்புடனும் ஆசீர்வாதத்துடனும் இவ்வாறான வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றார். அத்துடன் பிரதமர், ஜனாதிபதி ஆகியோருடன் தனக்குள்ள நட்பின் காரணமாகவும் இவ்வாறான அபிவிருத்திச் செயற்பாடுகளை தன்னுடைய பிரதேசத்துக்கும் கிழக்குமாகாணத்தின் ஏனைய பிரதேசங்களுக்கும் அரசியல் வெட்டுக்குத்துக்களையும் தாண்டி  கொண்டுவந்து சேர்க்கின்றார். அந்தவகையில் ஏறாவூரின் பழமை வாய்ந்த  பொதுச்சந்தை மற்றும் பெண்சந்தை, ஏறாவூர் நகரசபையின் வளாகத்தில் கலாசார மண்டபமும் சகல வசதிகளையும் உடைய நவீன நூலகமும் நகரசபையின்  வருமானத்தை அதிகரிக்கும் பொருட்டு கடைத்தொகுதிகளையும் பல பாடசாலைகளுக்கு நீண்டகாலத் தேவைகளாக இருந்த கட்டிட வசதிகளையும்,ஏனைய வீதிகள், வடிகாலமைப்பு, மக்களின் வாழ்வாதாரம், கைத்தொழில்பேட்டைகள், அரச மற்றும் தனியார் துறைகளில் யாரும் வழங்கிடாத அதிகளவிலான வேலைவாய்ப்புக்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள்,   எமது ஆதார வைத்தியசாலையின் நீண்டகாலத் தேவையாக இருந்த அவசர சிகிச்சைப் பிரிவு மகப்பேற்று மருத்துவமுனை அம்மருத்துவமனைக்கான மின்தூக்கி மற்றும் வைத்தியசாலையின் அறுவைச் சிகிச்சைப்பிரிவு, நோயாளர் விடுதிக்கட்டிடங்கள் அதற்குத் தேவையான வைத்திய உபகரணங்கள், வைத்தியசாலைக் கட்டிடங்களுக்கான கண்காணிப்புக் கமரா கட்டமைப்புக்கள் போன்றவற்றுக்காக  பல கோடி ரூபாய் நிதிகளை பெற்று செய்தும், செய்வதற்கான நடவடிக்கைகளிலும் முனைப்புடன் செயற்பட்டு வருகின்றார். கடந்த இரண்டுவருடங்களாக கிழக்குமாகாணத்திலிருந்து கல்விக் கல்லூரி ஆசிரிய நியமனங்களை வெளி மாகாணத்துக்குப்  பெற்றவர்களை  அவர்களின் சொந்த மாகாணத்துக்கே கொண்டுவந்த சேர்த்த வரலாற்றுப் பெருமையும் கௌரவ முதலமைச்சரையே சாரும்.

இவ்வாறான அபிவிருத்திச் செயற்பாடுகள் எமது பிரதேசத்தில் நீண்டகால தேவைகளாக இருந்தபோதிலும் முதலமைச்சருக்கு முன்னிருந்த இந்த அரசியல் வாதியினால் அதிகாரத்தில் இருந்தபோது ஆகக் குறைந்தது சுகாதார அமைச்சராக இருந்துகூட எமது வைத்தியசாலையின் நீண்டகால குறைபாடுகளைத் தீர்க்கமுடியாமல் போனது கவலையான விடயம்தான். ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா அவர்கள் வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகருடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு சில வைத்திய உபகரணங்கள் தான் தருவதாகவும், அதற்கான வேண்டுகோள் கடிதத்தினை தருமாறும் கூறியதோடு ‘’இதனை முதலமைச்சர் விடமாட்டாராக்கும் என ? ‘’ என்று ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா வே வைத்திய அத்தியட்சகரிடம் கூறியிருக்கிறார்.

இங்கு குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால் ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா அவர்கள் தன்னுடைய ஹிறா பவுண்டேசனுக்கூடாகவே வைத்திய உபகரணங்களை தருவதாக கூறியிருந்தாலும் ஏற்கனவே ஏறாவூர் ஆதாரவைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் அவர்கள் வைத்தியசாலையின் தேவைகள் பற்றிய BH/ER/GEN/2016 இலக்க 01.09.2016 ஆம் திகதிய கடிதம் ஒன்றினை  கடிதம் ஒன்றினை ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா அவர்களிடம் ஒப்படைத்திருந்தார். இதுபோல அதே வைத்திய அத்தியட்சகர் கௌரவ முதலமைச்சர் அவர்களுக்கு வைத்தியசாலையின் தேவை பற்றிய தன்னுடைய BH/ER/GEN/2016 இலக்க 03.08.2016 ஆம் திகதிய கடிதம் ஒன்றினை ஒப்படைத்திருந்தார். இதனைக் கருத்திற்கொண்ட முதலமைச்சர் அவர்கள் மாகாண, மத்திய அரசாங்கத்தின் நிதிமூலம் இத்தேவைகளை விரைவுபடுத்தி செய்துகொண்டிருக்கிறார். முதலமைச்சர் முன்னுரிமை அடிப்படையில் தேர்ந்தெடுத்து நிதி பெற்றுக்கொண்ட அதே வேலைத்திட்டத்தினை அமைச்சர் ஹிஸ்புல்லா அவர்களும் தெரிந்துகொண்டே அதற்கு கோரிக்கைக் கடிதம் கோரியிருப்பது இவ்வாறான வீண் பழியை முதலமைச்சரின்மீது சுமத்துவதற்கான கைங்கரியமாக இருக்குமோ என்ற சந்தேகம் எனக்குள் எழுகிறது. இதைவிட வைத்திய அத்தியட்சகரினால் அவருக்குக் கொடுக்கப்பட்ட வேறுதேவைகளை நிறைவேற்றிக்கொடுக்காமல் அதே விடயத்தை செய்து தருவதற்காக மேலும் ஒரு கோரிக்கைக் கடிதம் கோரியதை  சிறுபிள்ளைத்தனமாகவே நோக்கலாம்.   இது வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகருக்கும் அங்குள்ள நிருவாகத்தினருக்கும் நன்றாகத் தெரியும்.

இங்கு சுட்டிக்காட்ட வேண்டியது என்னவென்றால் முதலமைச்சர் அவர்கள் 2015.02.06 லேயே முதலமைச்சராக  பதவியேற்றார். ஆனால் ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாவுக்கு வைத்தியசாலையின் தேவை பற்றிய கடிதம் 01.09.2016 இலேயே  கொடுக்கப்பட்டது .ஆகவே முதலமைச்சர் இக்கடிதத்தினை அல்லது கோரிக்கையினை தடுத்திருக்கவில்லையே ? யாருடைய அபிவிருத்தி வேலைகளையும் தடுக்கவோ நிறுத்தவோ அல்லது எமது பிரதேசத்துக்கு வந்த கடந்தகால நிதி ஒதுக்கீடுகளை வெட்டி அவர்களுடைய பிரதேசங்களுக்கு கொண்டு சென்றவர்களைப் போல்  முதலமைச்சர் முற்படவில்லை என்பதற்கு இதனை விட என்ன ஆதாரம் இருக்கிறது ? எந்த அதிகாரியையும் பணயக் கைதியாக வைத்து அரசியல் செய்யும் தேவை முதலமைச்சருக்குக் கிடையாது. ஆனால் இவர்களது அதிகாரக் காலத்தில் பல திணைக்களத் தலைவர்களை தம்முடைய வீட்டு வேலைக்காரகளைப் பயன்படுத்தியவர்களும் இந்த மேதாவித்தன அரசியல்வாதிகள்தான். குறை காண்பதைத் தவிர வேறொன்றும் செய்ய முடியாமல் இவர்கள் திணறுகிறார்கள்.  எமது பிரதேசத்தில் பல அரசியல்வாதிகளும் அவர்களுடைய கொள்ளளவுக்கு ஏற்ப வேலைத்திட்டங்களை  சுதந்திரமாக செய்வதில் எந்தத் தடையும் இல்லை. விரிவு அஞ்சி அதனை இவ்விடத்தில் தவிர்த்து கொள்கின்றேன். மேலதிக தகவல்கள் தேவையாயின் என்னோடு யாரும் தொடர்புகொள்ளலாம். கடந்த காலங்களில் அபிவிருத்தி வேலைகளை தடுத்தவர்கள் யார் ? துரோகமிழைத்தவர்கள் யார் ? என்ற பட்டியல் எம்மிடம் ஏராளமாக இருக்கின்றது. எனவே ஒருவரின் மீது வீண்பழி சுமத்துவதை இவர்கள் உடனடியாக நிறுத்தவேண்டும். அல்லது அவர்களை நோக்கி பதில்கள் நாகரீகமான முறையில் வழங்க தயாராக இருக்கிறோம்.

அப்துல் நாசர்,
முதலமைச்சரின் இணைப்புச் செயலாளர்,
முதலமைச்சரின் பிராந்திய அலுவலகம்,
ஏறாவூர்.


0652241051

டெங்குக் காய்ச்சலால் கல்முனையில் 5 வயது சிறுவன் உயிரிழப்பு

Posted by R | | Posted in



( சாய்ந்தமருது முஹம்மட் றின்ஸாத் )

நாட்டில் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றம் காரணமாக டெங்கு நுளம்பின்  பெருக்கம் அனைத்து இடங்களிலும் காணப்படுகிறது.

அந்தவகையில் கடந்த (29) ம் திகதி கல்முனையைச்சேர்ந்த 5 வயது சிறுவன் டெங்குக் காய்ச்சலினால் மரணமடைந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

காய்ச்சலினால் பீடிக்கப்பட்ட நிலையில், கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் கடந்த 27 ஆம் திகதி அனுமதிக்கப்பட்ட சிறுவனே தீவிர சிகிச்சைகளின் பின்னர் (29) உயிரிழந்துள்ளார் .

கல்முனை குடி 16 ஐச் சேர்ந்த அகமது அதீப் என்ற 5 வயது சிறுவனின் உயிரையே டெங்குக் காய்ச்சல் பறித்துள்ளது.

இதேவேளை, கடந்த மாதம் 14 ஆம் திகதி சாய்ந்தமருது பகுதியைச் சேர்ந்த 11 வயதான சிறுவன், டெங்குக் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட நிலையில், கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அன்பான எமது உறவுகளே :
எமது பிள்ளைகள் எமது உறவுகள் தான் இவ்வாறு டெங்குக் காய்ச்சலால் மரணமடைகிறார்கள் தயவு செய்து இந்த உயிர்கொள்ளி டெங்கு நுளம்பினை அழிப்பதர்காக அவைகள் உருவாகக்கூடிய குறும்பை மட்டைகள், யோகட் கோப்பைகள், டயர்கள், பூச்சாடிகள், வடிகான்கள்  போன்ற இடங்களை இல்லாது ஒழித்து எம்மையும் எமது சமுகத்தினையும் பாதுகாப்போம்

காரமுனை கிராமத்தின் பிரதான வீதியில் இனங்காணப்பட்ட இடங்களுக்கு தெரு மின்விளக்ககள் பொருத்தப்பட்டன.

Posted by R | | Posted in


எம்.ரீ. ஹைதர் அலி

வாகரை கோறளைப்பற்று வடக்கு பிரதேச சபைக்குட்பட்ட காரமுனை கிராமத்தின் பிரதான வீதியில் தெரு மின்விளக்குகள் இல்லாமையினால் அக்கிராமத்தில் வசிக்கும் மக்கள் இரவு நேரங்களில் விச ஜந்துக்களின் இன்னல்களுக்கும் காட்டு யானைகளின் அட்டகாசங்களுக்கும் முகம்கொடுத்து வந்தனர்.

இவ்விடயம் தொடர்பாக கவனம் செலுத்திய கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி கோறளைப்பற்று வடக்கு பிரதேச சபையின் செயலாளர் எஸ். இந்திரகுமார் அவர்களிடம் இக்கிராத்திலுள்ள மக்களின் நலன்கருதி அவசியத்தேவைப்பாடாகவுள்ள இடங்களை இனங்கண்டு அவ்வீதியில் தெரு மின்விளக்குகளை இடுமாறு பணிப்புரை விடுத்திருந்தார்.

அதற்கமைவாக 2016.12.31ஆந்திகதி - சனிக்கிழமை பிரதேச சபையினால் அடையாளம் காணப்பட்ட காரமுனை கிராமத்தின் பிரதான வீதியிலுள்ள சில இடங்களுக்கு தெரு மின்விளக்குகள் பொருத்தப்பட்டன.

காரமுனை முகைதீன் ஜூம்ஆ பள்ளிவாசலுக்கான மின்சார இணைப்பினை பெற்றுக்கொள்வதற்காக தனது சொந்த நிதியிலிருந்து முதலாவது மின்சார இணைப்பினை 2016.11.25ஆந்திகதி - வெள்ளிக்கிழமை  பொறியியலாளர் ஷிப்லி பாறுக் பெற்று கொடுத்தபோது காரமுனை முகைதீன் ஜும்ஆ பள்ளிவாசலின் சார்பாக பிரதான வீதியில் அடையாளங் காணக்கூடிய இடங்களுக்கு தெரு மின்விளக்குகளை பெற்றுத்தருமாறும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக்கிடம் பள்ளிவாசல் நிருவாகசபை சார்பாக எஸ். நளீம் அவர்களால் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

காரமுனை முகைதீன் ஜும்ஆ பள்ளிவாசலின் நிருவாக சபையின் சார்பாக முன்வைக்கப்பட்ட கோரிக்கையான  தெரு மின்விளக்குகளை இட்டமைக்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் மற்றும் கோறளைப்பற்று வடக்கு பிரதேச சபையின் செயலாளர் எஸ். இந்திரகுமார் ஆகியோருக்கு காரமுனை முகைதீன் ஜும்ஆ பள்ளிவாசல் நிருவாகசபை மற்றும் அங்குள்ள பொதுமக்கள் ஆகியோரும்  தங்களது நன்றிகளை தெரிவித்துக்கொண்டனர்.

srilanka tody

Powered by Blogger.

About

Slider

Top Ad 728x90

Top Ad 728x90

Featured Post Via Labels

Top Ad 728x90

Featured Slides Via Labels

Top Ad 728x90

Featured Posts Via Labels

More on

Find Us On Facebook

Advertisement

Slider

Featured Video

Featured Video

Style2

Social Share

Style3[OneRight]

Style4

Video Of Day

International

Text Widget

About Me

Today's Highlights

Fun & Fashion

உடனடி வேலை வாய்ப்பு

உடனடி வேலை வாய்ப்பு

Sponsor

Flickr Images

Site Links

Like

Gallery

Subscribe

Author

Ads

Popular Posts

Most Popular